Saturday, April 12, 2008

காதல்

என் கவிதைகளின் கருவானவளே
இதோ என் இதயம் கிழிந்து
உதிரம் கசிகிறது நீ
விதைத்த காதல் விதை
வளர்ந்து விருட்சமாகி
கொண்டிருக்கும் போது
அங்கம் அங்கமாக அறுத்தெடுக்கிறாயே
உன் புதிய உறவின் புண்ணிறத்தால்
ஒவ்வொரு இரவும் என்
கண்ணீரால் ஈரமாவது உனக்கெங்கே
புரியப்போகிறது நிரந்தரமாய்
உறங்க நினைக்கிறேன்
காலனும் என்னைக் கை விட்டு விட்டான்
காடு கூட எனை வெறுக்கிறது போலும்
என் கவிதைக்கு முற்றுப்புள்ளி
வைத்து விட்டு இன்னொரு கவிக்கு
தலைப்பிட சென்று விட்டாயா?

No comments: