Friday, April 11, 2008

நட்பு

மிக நீண்ட இடைவெளிக்குப் பின்
என் எழுத்துக்கள் உயிர் பெறத்துடிக்கின்றன
ஆன்மாவரை ஊடுருவிய அந்த நட்பு
மிக வேகமாக வெளியேறியது
வலி உயிருக்கு மட்டுமல்ல
உள்ளத்திற்கும் தான். என்ன செய்வது
சொல்லின்றி செயலின்றி மெளனமாக
கண்களில் உறைந்துவிட கண்ணீருடன்
விடை கொடுத்தேன் போ..
திரும்பவும் வந்துவிடாதே இங்கே
எதுவுமே இருக்காது உயிருடன் உன்னை
வரவேற்க எஞ்சியது நீ
ஏற்படுத்திய காயத்தின் சுவடுகள் மாத்திரமே.
.................................................................................................
நன்றி றொஷான்
.................................................................................................

No comments: